கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேர்தல் சீர்திருத்தத்துக்கு அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல் 2030-ம் ஆண்டு வரை நடைபெறும் எந்தவொரு இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைய இயக்குனர் ராமதானி கைலிமா அறிவித்துள்ளார்.