அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் – திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்றின் மீது, அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்று பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், பின்னர் பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறி ஒன்றின் மீதும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்து சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.
விபத்து குறித்து அக்போபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்