வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பெறப்பட்ட 1,536.1 மில்லியன் டொலர் மதிப்போடு ஒப்பிடும்போது 18.1% அதிகமாகும்.
2020 டிசம்பரில் இலங்கை பெற்ற 812.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் தவிர்த்து, வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய அதிகபட்ச பணப்பரிமாற்றம் இதுவாகும்.
இந்தத் தரவு அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட வாராந்திர பொருளாதார அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.