தமிழ் , சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (13) மற்றும் நாளை (14) இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளின் உறவினர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை அவர்களுக்கு வழங்க முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது