புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களின் வசதி கருதி இன்றைய தினமும் போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று(12) பயணிகள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வந்தமையினால் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், இன்றும் பொதுமக்களுக்குப் போதுமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு மற்றும் சேவை மேற்பார்வை பிரிவின் பணிப்பாளர் ஷெரில் அதுகோரல தெரிவித்தார்.
அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களில் ஈடுபடும் மக்களின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளை முன்னெடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பதுளை, பெலியத்த, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு மேலதிகமாக 40 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.