மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கட்டுமாண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றுக்கு அருகிலிருந்து இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது