மொரட்டுவ, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (11) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை தட்டியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.