follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வணிகமயமாக்கலில் கவனம்

பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வணிகமயமாக்கலில் கவனம்

Published on

பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC) ஏற்பாடு செய்த சந்திப்பு நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையம், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவுகள் இதில் பங்கேற்றன.

இலங்கையில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நிறைவுசெய்யப்பட்ட மற்றும் நிறைவடையும் தருவாயில் உள்ள ஆய்வுகளை பொருளாதார நடவடிக்கைகளுக்கு திறம்பட பயன்படுத்தி அதற்காக முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் NIRDC பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்களில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு இந்த தெளிவுபடுத்தல் மேற்கொள்ளப்பட்டதுடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாதுகாப்புப் பிரிவினால் செயல்படுத்தப்பட்டு, தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ள ஆய்வு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஓரளவு முடிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட ஆய்வு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்தத் துறைகளுடன் தொடர்புடைய ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறிதல், புத்தாக்கத் திறன்களை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் மற்றும் அந்த வளங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் சிவில் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

கலந்துரையாடல் சிறப்பாக நிறைவடைந்ததுடன், மேலும் எதிர்காலத்தில் வணிகமயமாக்கப்படக்கூடிய புத்தாக்கங்கள் அடையாளம் காணப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...