காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹ்மட் சுபைர் ‘ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (26) மக்கள் கருத்துக்களை கேட்டறியும் தருணத்திலேயே, அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.