follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

Published on

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

சுற்றுலாக் கைத்தொழில் நாட்டில் முதன்மைக் கைத்தொழில் என்றும் இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் நிலைபேறான சுற்றுலாப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சுற்றுலா அமைச்சு செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காணப்பட்ட வீசா பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக விரைவாக செயல்பட்டதாகவும், எதிர்காலத்தில் சுற்றுலாத் துறையில் மாற்றங்கள் பலவற்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எல்ல, காலி, சீகிரியா போன்ற பிரதான சுற்றுலாக் கவர்ச்சி மிகுந்த இடங்களின் அண்மையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், சுற்றுலாத் தளங்களின் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெளிவுபடுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் இன்று (18)...

கொலம்பியாவில் நாடு தழுவிய சுகாதார அவசரநிலை பிரகடனம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை...

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய...