போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக GovPay செயலி மூலம் செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டம் குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான வீதியின் 11 இடங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி GovPay வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதனூடாக பொதுமக்கள் அனைத்து அரசாங்கக் கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் முறையில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.