சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பஸ் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதனைத்தவிர பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கத்தில் பஸ்கள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.