சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. இதனால் அமெரிக்க டாலர் கொள்முதலைக் குறைக்குமாறு அரசுக்குச் சொந்தமான வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் டாலர் மதிப்பு வேகமாக சரியும். டாலரை நம்பி உள்ள மற்ற வர்த்தகங்கள் மிக வேகமாக சரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம் வரி விதிக்கப்படும்.
கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.
அதே சமயம் சீனா மீதான வரிகளை அவர் நிறுத்தவில்லை. சீனா மீது வரிகள் தொடரும் என்று அறிவித்துள்ள நிலையில் வரி வீதத்தினை 105 ஆகவும் உயர்த்தியுள்ளது.