follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉலகம்கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.

இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.

நேற்று முன்தினம் அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் கட்டிடத்தில் சிக்கி இறந்து போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இணைப்புச் செய்தி
டொமினிகன் குடியரசில் இரவு நேர களியாட்ட விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலி

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ்...

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் வாழும் உறுதியான ஆதாரங்கள்

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன்...

தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்கள் சிலவற்றை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து...