பொலிசாருக்கான தனித்துவமான ஊதிய அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற செயல்கள் அமைச்சரான ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.
அதற்கான வரைமுறை திட்டம் தற்போது செயற்பாட்டு பொலிஸ்மா அதிபரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும் அவர் கூறினார்.
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் இணைத்து புதிய ஊதிய அமைப்பை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் சேவையில் உள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.