பட்டலந்தை வீட்டுத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை மையங்கள் அமைத்து நடத்தப்பட்டமை தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை பற்றிய பாராளுமன்ற விவாதம் இன்று (10) ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு நாட்களைக் கொண்ட இந்த விவாதம் இன்று காலை 11.30 முதல் பிற்பகல் 5.30 வரை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைய அறிக்கை கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆணைய அறிக்கை தொடர்பான இரண்டாவது நாள் விவாதம் மே மாதத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய விவாதத்தைத் தொடர்ந்து, பாராளுமன்றம் 2025 மே மாதம் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.