follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP1சீனாவைத் தவிர ஏனைய நாடுகளுக்கு ட்ரம்ப் இனது புதிய வரி விதிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

சீனாவைத் தவிர ஏனைய நாடுகளுக்கு ட்ரம்ப் இனது புதிய வரி விதிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

Published on

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவைத் தவிர, அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் தற்போது 10% உலகளாவிய வரி விதிக்கப்படும் என வௌ்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இன்று அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பை அமுல்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை ​125 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ்...

16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18)...

ஈஸ்டர் ஞாயிறு – தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் நடைபெறும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதன்படி, நாள...