அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 84 வீத வரியை விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இரண்டு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை இன்று முதல் அமுலாகும் வகையில் சீனா மீது 104 வீத தீர்வை வரி விதிக்கப்படுவதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க பொருட்கள் மீது சீனா விதித்த 34 வீத வரியை மீளப்பெற சீனாவிற்கு வழங்கப்பட்ட 24 மணித்தியால கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் அமெரிக்காவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.