கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த பராட்டே சட்ட அமுலாக்கத் தடை, நீடிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 மார்ச் 31க்கு முன்னர் சலுகை தொடர்பில் கலந்துரையாடிய 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனை பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 25 மில்லியன் முதல் 50 மில்லியனுக்கும் இடையில் கடன் பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், 50 மில்லியனுக்கும் அதிகளவான கடனை பெற்றுவர்களுக்கு 2025 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.