பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலத்தில் அதிக கேள்வி எழுவதே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை ஒன்றின் சில்லறை விலை 39 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், கோழி இறைச்சி ஒரு கிலோ 1,100 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பேலியகொடை மீன் சந்தை நிலவரங்களின் படி, மீனின் விலை அதிகரிக்கப்படும் என பேலியகொடை மீன் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.