follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP1ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

Published on

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கடன் முகாமைத்துவத்துக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் இருந்தபோதிலும், தவறான நிர்வாக முடிவுகளால் நட்டத்தைச் சந்திக்கும் முன்னணி அரச நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

கடந்த அரசாங்கம் இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க எடுத்த தீர்மானத்தை மாற்றியமைத்து, தற்போதைய அரசாங்கம் அதை தேசிய விமான சேவையாக தொடர்ந்து செயற்படுத்தவும், புதிய நிர்வாகத்தின் கீழ் இலாபகரமான நிறுவனமாக மாற்றி, முன்னோக்கிக் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாணந்துறை கடலில் காணாமல் போன மாணவர்கள் – தொடரும் தேடும் பணிகள்

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக...

தலதா கண்காட்சி – இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்

தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கண்டி நகருக்குள் யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச்...

VAT வரி தொடர்பில் அரசின் புதிய நிலைப்பாடு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர்...