இரண்டு நாள் பயணமாக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்க்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
துபாய் பட்டத்து இளவரசர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மையை முன்னேற்றுவதில் துபாய் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பு ஆழமாக வேரூன்றியது. துபாய் பட்டத்து இளவரசர் வருகை எதிர்காலத்தில் இன்னும் உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.