follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP2புத்தாண்டை முன்னிட்டு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம்

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு புறப்படும் பயணிகளுக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை புகையிரதத் திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன ஒருங்கிணைந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வினால் விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

அதன்படி மகரகம, புத்தளம், ஹை லெவல்/ லோ லெவல், தம்புள்ள மற்றும் காலி போன்ற பிரதான ஐந்து நுழைவாயில்களை மையப்படுத்தி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக தூர சேவை பஸ் சேவைகள் செயல்படுத்தப்படுவதுடன் வழமையான நேர அட்டவணையின் படி செல்லும் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக 500 பயணச் சுற்றுகள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம், கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை, கண்டி மற்றும் காலி போன்ற பிரதேசங்களுக்கு சாதாரண நேர அட்டவணைக்கு மேலதிகமாக விசேட புகையிரத சேவைகளை ஈடுபடுத்துவதாக அவ்வறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே மாகும்புற, கடவத்தை, கடுவளை மற்றும் கொழும்பு பெஸ்டியன் மாவத்தை ஆகியவற்றை மையப்படுத்தி அதிவேக நெடுஞ்சாலை ஊடாக காலி, மாத்தறை, பதுளை தங்கல்லை, கதிர்காமம் போன்ற இடங்களுக்காக மேலதிக பஸ் சேவைகள் 350 சுற்றுக்களில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலப்பகுதியில் கிராமங்களை நோக்கி பயணிப்பதற்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரப் பிரதேச பஸ் தரிப்பிடங்களுக்கு 8 இலட்சம் அளவிலான பிரியாணிகள் வருகை தந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எதிர்பார்க்கப்படுகிறது.

இக்காலப் பகுதியில் 24 மணி நேரமும் உள்ளடக்கியதாக செயல்பாட்டு அறை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு ஆகியன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் 1955 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் மற்றும் 071259 5555 whatsapp இலக்கம் என்பவற்றின் ஊடாக பயணிகள் தொடர்பு கொள்ள முடியும் என்றும் ஆணைக்குழு அவ்வறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே தேசிய போக்குவரத்து சபை பஸ் தொடர்பான விபரங்களை 1958 மற்றும் புகையிரதத் தகவல்களுக்காக 1971 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இக்காலப் பகுதியில் பயணிகளிடம் மேலதிக கட்டணங்கள் அறவிடப்படுவதில்லை என்பதை பரீட்சிப்பதற்காக பிரதான நுழைவாயில்களில் 24 மணி நேரமும் நடமாடும் பரிசோதர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம்...

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க...