தேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே திணைக்களத்தினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கெலிப்சோ ரயில் இன்று காலை 8.10 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தெமோதர ரயில் நிலையம் வரை பயணத்தை ஆரம்பித்தது.
இந்த கலிப்சோ ரயில் சேவை இன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் நானுஓயா முதல் தெமோதர வரை பயணிக்கும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டு இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் விசேட சிற்றுண்டிச்சாலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கென ஒரு சுற்றுலாப் பயணியிடம் 10,000 ரூபா அறவிடப்படும்.