அமெரிக்கா விதித்த சுங்க வரி தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் மேலும் ஒரு சந்திப்பு இன்று (08) இரவு நடைபெறவுள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடும் போது பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட பதில் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.