இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணியின் பெறுமதி, 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் 6.51 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் வரை அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 2025 பெப்ரவரி மாதத்தில் 6.08 பில்லியன் டொலர் மற்றும் ஒப்பீட்டளவில் 7.1% வீத அதிகரிப்பாகும்.
இதனிடையே இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி 2025 மார்ச் மாதத்தில் 401.9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உள்நாட்டு வெளிநாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் கொள்வனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.