வட கொரியாவில் 6 வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில் சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது.
இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது.