follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP1“குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

“குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published on

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை பரவல் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திச் செயல்முறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசாங்கம் அல்லாத ஏனைய நிறுவனங்களுக்கு இந்த குடிசன கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. குடிசன தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டெப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏப்ரல் 28க்குள் வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு விநியோகிக்க எதிர்பார்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக...

CIDயிலிருந்து மைத்திரி வௌியேறினார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த...

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட...