follow the truth

follow the truth

April, 7, 2025
Homeவிளையாட்டுஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிராஜ் சாதனை

ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிராஜ் சாதனை

Published on

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்களை எடுத்தது. குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்நிலையில், ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் 4 ஓவர் வீசி 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும், இந்தப் போட்டியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையையும் படைத்திருக்கிறார்.

மேலும், 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் தனது சிறந்த பந்துவீச்சையும் சிராஜ் பதிவுசெய்திருக்கிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடகொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்ட மரத்தன் போட்டி

வட கொரியாவில் 6 வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன்...

‘ஹாட்ரிக்’ தோல்வி கண்ட சென்னை சுப்பர் கிங்க்ஸ் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம்

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள்...

25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20...