துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொருட்களை விடுவிப்பதற்கான பட்டியல் இன்று மத்திய வங்கியிடம் கையளிக்கப்படும் எனவும் பட்டியல் கையளிக்கப்பட்டதன் பின்னர் படிப்படியாக பொருட்கள் விடுவிக்கப்படும் எனவும் அமைச்சர் ந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர் ஒருவர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் அளவு இன்று முதல் 10 கிலோகிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சதொச நிவாரணப் பையில் சீனியை கொள்வனவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு கிலோகிராம் அரிசியை வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.