இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக இந்தியப் பிரதமர் தமிழகத்தை நோக்கிப் புறப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பான அரவணைப்புக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இந்தியப் பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான எனது விஜயத்தின்போதான அன்பான அரவணைப்புக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கொழும்புக்கான விஜயமாக இருந்தாலும் சரி, அநுராதபுரத்துக்கான விஜயமாக இருந்தாலும் சரி இரண்டுமே நமது… pic.twitter.com/2P9liiQEN2
— Narendra Modi (@narendramodi) April 6, 2025