இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்றுமுன்னர் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிஞ்ஞை அமைப்பை திறந்து வைத்தார்.
இதனுடன், நவீனமயமாக்கப்பட்ட மஹா – ஓமந்தை ரயில் பாதையும் இந்தியப் பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
தொடர்புகளை மேம்படுத்தல் மற்றும் நட்புறவை வலுவாக்கல்!
அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். அதேபோல மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன… pic.twitter.com/Uk2TSHXN2E
— Narendra Modi (@narendramodi) April 6, 2025