இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் அநுராதபுர ஜய ஸ்ரீ மஹா போதி வழிபாட்டில் ஈடுபட அங்கு சென்றுள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி ஷ்யாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் பிரதம பீடாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
இதற்கிடையில், தனது X கணக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரம் நகருக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
எனது நண்பர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் அநுராதபுரத்தில் என பதிவிட்டிருந்தார்.
எனது நண்பர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் அநுராதபுரத்தில்…@anuradisanayake pic.twitter.com/YNTvgLk9Ju
— Narendra Modi (@narendramodi) April 6, 2025