சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் 41 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சென்னை அணி 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. மொத்தமாக சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3வது வெற்றி பெற்றுள்ளது.