இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (05) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
இந்தியா-இலங்கை இடையேயான நட்பை வலுப்படுத்துவதில் சஜித் பிரேமதாச கொண்டுள்ள தனிப்பட்ட பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் தாம் பாராட்டியதாக நரேந்திர மோடி தமது முகப்புத்தகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.