வர்த்தக வங்கிகளில் டொலர்கள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜுலை மாதம் முதல் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டில் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.