சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் கஹவ,மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் புன்தல ஆகிய இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.