follow the truth

follow the truth

April, 5, 2025
HomeTOP2இந்தியப் பிரதமர் விஜயம் - கொழும்பில் மூடப்படும் வீதிகள் புதிய அறிக்கை

இந்தியப் பிரதமர் விஜயம் – கொழும்பில் மூடப்படும் வீதிகள் புதிய அறிக்கை

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்துத் திட்டத்தின்படி கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படும் முறை குறித்து பொலஸார் இன்று (5) புதிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தின் காரணமாக வீதிகள் மூடப்படும் காலப்பகுதியில், சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று(05) காலி முகத்திடலில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை வீதி மூடல்

பிரதமர் நரேந்திர மோடி காலி முகத்திடலில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை பயணிக்க உள்ளார். இதனால் காலை 8:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை, காலி முகத்திடல் சுற்றுவட்டம், காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை சந்தி, செஞ்சிலுவை சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, கிளாஸ் ஹவுஸ் சந்தி, ஆல்பர்ட் கிரசண்ட், நந்தா மோட்டார்ஸ் சந்தி, சுதந்திர வீதி, சுதந்திர சுற்றுவட்டம் மற்றும் சுதந்திர சதுக்கம் வரையிலான வீதிகள் மூடப்படும்.

இந்த காலகட்டத்தில் கீழுள்ள மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.

கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் தும்முல்ல, பௌத்தாலோக மாவத்தை, விஜேராம சந்தி இடதுபுறம், ஹோர்டன் விஜேராம, கண் வைத்தியசாலை வழியாக கொழும்பு நோக்கிச் செல்லலாம்.

கொழும்பிலிருந்து வெளியேறி, தர்மபால மாவத்தை, கண் வைத்தியசாலை, ஹோர்டன் சுற்றுவட்டத்தில் இடதுபுறம் திரும்பி, பௌத்தலோக மாவத்தை வழியாக வௌியேற முடியும்.

காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வீதி மூடல்

காலி முகத்திடலில் இருந்து காலி மத்திய வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார். இதனால் காலை 9:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை அந்த வீதி மூடப்படும்.

இந்த காலகட்டத்தில் கீழ்க்கண்ட மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.

கொழும்புக்கு நுழையும் வாகனங்கள்: கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பித்தளை சந்தியில் இடப்புறம் திரும்பி, கங்காராம வழியாக கொம்பனித்தெரு சந்தி, செரமிக் சந்தி வழியாக கொழும்பு நோக்கிச் செல்லலாம்.

கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள்: அதே வீதிகளை பயன்படுத்தி வெளியேறலாம்.

காலி முகத்திடலில் இருந்து பெலவத்த அபேகம வளாகத்திற்கு செல்லும் வீதி மூடல்

காலி முகத்திடலில் இருந்து காலி மத்திய வீதி வழியாக பெலவத்த அபேகம வளாகம் வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார். இதனால் காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை சந்தி, நூலக சந்தி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, தாமரை தடாக சுற்றுவட்டம், ஹோர்டன் கிங்ஸி சந்தி, டட்லி சேனாநாயக்க மாவத்தை, டி.எஸ். சந்தி, மொடல் பார்ம் சந்தி, காசல் வீதி, ஆயுர்வேத சந்தி, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி , பொல்துவ சந்தி, பாராளுமன்ற வீதி வழியாக பெலவத்த அபேகம வளாகம் வரை மாலை 4:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை வீதிகள் மூடப்படும். பிரதமரின் வாகனத் தொடர் கடந்து செல்லும் முனையங்களுக்கு ஏற்ப வீதிகள் படிப்படியாக திறக்கப்படும்.

மாற்று வழிகள்

கொழும்பிலிருந்து வெளியேறுதல்: பண்டாரநாயக்கபுர சந்தி, கொட்டா வீதி வழியாக புத்கமுவ அம்பகஹ சந்தியில் வலப்புறம் திரும்பி, கொஸ்வத்த சந்தி வழியாக கடுவெல நோக்கி செல்லலாம்.

பழைய கொட்டா வீதி வழியாக வெலிகட சந்தி, நாவல வீதி வழியாக ஹைலெவல் வீதிக்கு செல்லலாம்.

கொழும்புக்கு நுழைதல்: பெலவத்த, பாலந்துன முனையத்தில் வலப்புறம் திரும்பி, கொஸ்வத்த வீதி வழியாக, அம்பகஹ சந்தியில் வலப்புறம் திரும்பி, ஐ.டி.எச். வழியாக பழைய அவிசாவளை வீதி ஊடாக கொழும்பு நோக்கிச் செல்லலாம்.

காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லுதல் வீதி

காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார். இதனால் காலி மத்திய வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம், ஜனாதிபதி மாளிகை வரை மாலை 6:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை வீதி மூடப்படும்.

இந்த காலகட்டத்தில் கீழுள்ள மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.

கொழும்புக்கு நுழைதல்: கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பித்தளை சந்தியில் இடப்புறம் திரும்பி, கங்காராம வழியாக கொம்பனித்தெரு சந்தி, செரமிக் சந்தி வழியாக கொழும்புக்கு நுழையலாம்.

கொழும்பிலிருந்து வெளியேறுதல்: அதே வீதியை பயன்படுத்தி வெளியேறலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர்...

இந்தியா – இலங்கை 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று(05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு...