இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று(05) காலை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(04) நாட்டிற்கு வருகை தந்தார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” எனும் எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதும் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளது.