எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரியை விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியினால் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தீர்வை வரிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் சீனா மீது 54 வீத தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.
தீர்வை வரியை அதிகரிப்பது தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச வர்த்தக சட்டத்திற்கு முரணானதென சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.