சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இன்று (04) 8% சரிந்து, 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயின் காலத்தில் இருந்த மிகக் குறைந்த விலையை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.59 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.96 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த வீழ்ச்சி உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.