தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் மீதான பதவி நீக்க நடவடிக்கையை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஒருமனதாக உறுதி செய்ததை தொடர்ந்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தென் கொரியாவில், 60 நாட்களுக்குள் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, யூன் சுக் யோல் அதிபர் பதவியை இழந்ததைத் தொடர்ந்து அது தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருந்தார்.
தீர்ப்பு வெளியானதற்குப் பின்னர், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதற்காக “உண்மையில் வருந்துகிறேன்” என்று தெரிவித்தார் யூன்.
யூன் சுக்-யோலின் பதவி நீக்கத்தை அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.
எனவே 60 நாள் காலகட்டத்தின் கடைசி நாளான ஜூன் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.