நாடு முழுவதும் உள்ள வேட்பாளர்களுக்கு வரலாற்று சட்ட வெற்றியை நாங்கள் பெருமையுடன் அறிவிப்பதாக சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹார் தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹார், (இரட்டைக் கொடி) – நல்லாட்சிக்கான தேசிய முன்னனி சார்பாக புத்தளம் மாநகரசபை மற்றும் கல்பிட்டி பிரதேச சபை தொடர்பான மனுக்களை தாக்கல் செய்து வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்;
“பிரசித்தி பெற்ற நொத்தாரிசு அல்லது சமாதான நீதவானால் (Justice of the Peace) சான்றளிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் மற்றும் பிரதிகளை ஏற்கும் வகையில் அனுமதி அளித்துள்ளது. இந்த தீர்ப்பு, தேர்தல் செயல்முறையின் நியாயத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இந்த சட்டப் போராட்டம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்னும் தொடர்கிறது, மேலும் பல விண்ணப்பங்கள் விசாரணையில் உள்ளன. எனினும், இன்றைய தீர்ப்பு ஜனநாயக மதிப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியமான வெற்றியாகும். “
“இது ஜனநாயகத்திற்கான வெற்றி. சட்டத்தின் ஆட்சிக்கான வெற்ற மற்றும் மிக முக்கியமாக NFGG மற்றும் இஷாம் மரிக்காரை ஆதரிக்கும் புத்தளம் மக்களுக்கான வெற்றி ஒவ்வொரு குடிமகனும் நியாயமான மற்றும் நேர்மையான பிரதிநிதித்துவத்திற்கு தகுதியானவர், மேலும் இன்றைய தீர்ப்பு அவர்களின் குரல் அடக்கப்படாது என்பதை உறுதி செய்கிறது.
இந்த வழக்கினூடாக ஜனநாயக மதிப்புகள் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடிந்தது. நீதி மற்றும் நியாயம் எப்போதும் மேலோங்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அனைத்து குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்..”