follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP2பரஸ்பர வரி அதிகரிப்பை தொடர்ந்து அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு

பரஸ்பர வரி அதிகரிப்பை தொடர்ந்து அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு

Published on

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நேற்று (03) அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி அதிகரிப்பை அடுத்து, 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கப் பங்குச் சந்தையின் S&P 500 விலைச் சுட்டெண், 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொவிட் காலத்துக்குப் பின்னர் பதிவான மிகப்பெரிய வீழ்ச்சி இதுவென்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பொருளாதார சுபீட்சத்தை நோக்காகக் கொண்டு இந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தாலும், நிலைமை மாறுதலாக இருப்பதாக பொருளியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கப் பங்குச் சந்தை மாத்திரமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “ Sri Lanka’s Economic Revival” Reflection on the...

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல்...

பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தவறியதால் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.