பிரிட்டனுக்கு வருகை தரும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மின்னணு பயண ஆவணத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், 16 பவுண்டுகள் செலவழித்து அனுமதிகளைப் பெற வேண்டும்.
ஒரு காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான உறுப்பினராக இருந்த பிரிட்டன், பிரெக்ஸிட் செயல்முறைக்கு இணங்க ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, அன்றிலிருந்து ஐரோப்பாவிலிருந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது.
பிரிட்டன் இப்போது தனது நாட்டிற்கு வருகை தரும் அனைத்து ஐரோப்பியர்களையும் இலக்காகக் கொண்டு மின்னணு பயண அனுமதிகளை வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய முறையின் கீழ், பிரிட்டிஷ் எல்லையைக் கடக்கும் அனைவரும் இந்த மின்னணு பயண அனுமதிகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதிக்கு £16 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இதை ஆன்லைனில் பெறலாம்.
இது ஏப்ரல் 9 முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.