follow the truth

follow the truth

April, 5, 2025
HomeTOP1தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

Published on

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் மற்றும் செலவின ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி மற்றுமொரு கட்டம் இன்று (04) நடைபெறவுள்ளது.

இதில் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர, தேர்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பல கட்டங்கள் அண்மையில் பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி, முழு நாடளாவிய ரீதியில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருட உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

நேற்றைய (03) வரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய...

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில்...

சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குழுவினர் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தனர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில்...