வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த நபர் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இணைப்புச் செய்தி