follow the truth

follow the truth

April, 5, 2025
HomeTOP2தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

Published on

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (04) உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் குழு யூனின் பதவி நீக்க தீர்மானத்தை ஒருமனதாக உறுதிசெய்துள்ளனர்.

அதற்கமைய, தென்கொரியத் ஜனாதிபதி உடன் அமுலாகும் வகையில் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக 60 நாட்களுக்குள் புதிய தேர்தலை நடத்த வேண்டும். விசாரணையின் போது, ​​அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி இரு தரப்பினரின் வாதங்களையும் வாசித்தார். யூன் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியபோது நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

தேர்தல் நடைபெறும் காலம் வரையில் தற்போதைய பிரதமர், பதில் ஜனாதிபதியாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டும் தென் கொரியாவில் இதே முறையில் ஒரு ஜனாதிபதி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில்...

பிங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இரத்து

பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை (OIC) இடமாற்றம் செய்ய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய எடுத்த தீர்மானம்,...

அமெரிக்க ​பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரி

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ​பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரியை விதிக்கவுள்ளதாக...