பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன.
இதன்போது பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது