எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் மக்களுக்காக 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட ரயில்கள் இயக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அநுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய இடங்களுக்கும் விசேட ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.